கடும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.
ஜம்முவில் யாத்ரி பவனில் இருந்து ஆயிரத்து 860 யாத்ரிகர்களுடன் இந்தக் குழு 39 பேருந்துகள் மற்றும் 15 சிறு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றதாகவும், இவர்களில் 619 பெண்களும், 102 குழந்தைகளும் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமர்நாத் யாத்ரிகர்களுக்கு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்தித்தொடர்பாளர் கூறினார்.
கடந்த 15ஆம் தேதியன்று 900 பேர் அடங்கிய முதல் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த யாத்திரை கடந்த மாதம் 7ஆம் தேதியே தொடங்குவதாக இருந்தது. பனிப்பொழிவு, மழை காரணமாக இந்த யாத்திரை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.