ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு நாளில் மனித வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தப் போவதாகவும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-ஈ-தோய்பா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கசான்லி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காஷ்மீர் மக்கள் தேர்தலை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்குப்பதிவின் போது தங்கள் அமைப்பினர் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்துவார்கள் என்பதால், வாக்களிக்கச் செல்பவர்கள் அழிவைத் தேடிக் கொள்ள நேரிடும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த உளவு ஆராய்ச்சி அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கும் தகவலில், மும்பை தாக்குதல் போல மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தியாவில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.