தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி, உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஏற்றதால் பரோலில் விடுதலையான வருண் காந்தி பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் உள்ள அத்வானி வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தனக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக அத்வானிக்கு வருண் காந்தி நன்றி தெரிவித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
வருண்காந்தி தேர்தலில் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை அத்வானி கூறியதாகவும், இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஜனதா சார்பில் பிலிபிட் மக்களவைத் தொகுதியில் வருண்காந்தி போட்டியிடுகிறார். பிரசாரத்தின் போது இவர் மதக் கலவரத்தை தூண்டுவிதமாக பேசியதாக தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.