Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி நிலை முடிந்துவிட்டது: அந்தோனி!

Advertiesment
இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி நிலை முடிந்துவிட்டது: அந்தோனி!
, வியாழன், 16 ஏப்ரல் 2009 (12:32 IST)
இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் காலம் மலையேறிவிட்டது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று காலை வாக்களித்ததற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ள அந்தோனி, இத்தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி தனித்த பெரும் கட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க மற்ற கட்சிகளின் ஆதரவுகளை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ள அந்தோனி, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மதச்சார்பின்மையை ஆதரிக்கும் எந்தக் கட்சி ஆதரவளித்தாலும் அதனை காங்கிரஸ் ஏற்கும் என்று கூறியுள்ளார்.

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அம்மாநிலத்திலுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அந்தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil