பீகாரில் உள்ள சப்ரா தொகுதியில் போட்டியிடும் லல்லுவை விட அவரது மனைவி, பிள்ளைகளுக்கு அதிக சொத்து இருப்பது வேட்புமனு தாக்கலின் போது தெரியவந்துள்ளது.
மத்திய இரயில்வே அமைச்சரும், பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் பீகார் மாநிலம் சரண் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது லல்லுவை விட அவரது மனைவி, பிள்ளைகளுக்கு அதிக சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.
வேட்புமனுவில் இணைக்கப்பட்ட சொத்து விவரப் பட்டியலில் லல்லுவுக்கு அசையா சொத்து விவரம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அவரது மனைவி ராப்ரிதேவி, அவரது 9 பிள்ளைகளிடம் ரூ.1.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக மனுவில் லல்லு பிரசாத்யாதவ் தெரிவித்துள்ளார்.