ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இரகசியத் தகவலின்பேரில் பட்டாஸ் என்ற இடத்தில் இன்று அதிகாலை காவலர்களும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை மூண்டது.
இதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த இந்தத் தீவிரவாதிகளில் ஒருவர் அப்துல் மஜீத் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவரின் விவரம் தெரியவில்லை.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைத் துப்பாக்கிகளும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.