3ஜி செல்பேசி சேவைகள் தொடர்பான அனுமதி, விலை விவகாரங்களை கவனிக்க அமைச்சர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
மொத்தம் பத்து பேர் கொண்ட இந்தக் குழுவில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வேளாண் அமைச்சர் சரத் பவார், தொலைதொடர்பு அமைச்சர் அ.ராசா, இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், உரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சட்ட அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ், அயலுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் உள்ளனர்.