கடந்த 1993இல் நடந்த, மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கில் தண்டனை பெற்றுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாகத் தனது தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தவரும், அக்கட்சியின் சார்பில் லக்னோ மக்களவைத் தொகுதியில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளருமான சஞ்சய் தத், ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.