ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்று காலை மித நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை பதிவு செய்யும் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் காலை 09.18 மணிக்கு ஏற்பட்டது, 10 நொடிகள் நீடித்தது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் உயிர், உடமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.