Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஜ்பாய் உடல் நிலையில் முன்னேற்றம்

வாஜ்பாய் உடல் நிலையில் முன்னேற்றம்
, ஞாயிறு, 8 பிப்ரவரி 2009 (14:54 IST)
புதுடெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலனைத் தந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மார்பு தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் வாஜ்பாய், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் செயற்கை சுவாசக் கருவிகளுடனே இருந்து வருவதாகவும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரது ஈரல், சிறுநீரகம் நன்றாக செயல்படுவதுடன், இரத்த அழுத்தமும் சீராக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அவர் முழு அளவில் குணமடைய மேலும் சில தினங்கள் ஆகும் என்றும் மேலும் அவர்கள் கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil