மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஒரிசா மாநிலங்களில் நக்ஸலைட்டுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குனர்களின் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் காவல்துறையினர் 15 பேரை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, புதுடெல்லியில் இன்று இந்த உயர் நிலைக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநிலங்களில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் மார்கேகான் பகுதியில் 15 காவல்துறையினரை நக்ஸலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.