புதுச்சேரியில் உள்ள சர்வதேக் கூட்டுச்சமூக நகரமைப்பான ஆரோவில்லிற்கு திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா நாளை வரவிருக்கிறார்.
ஆரோவில்லில் திபெத்தியக் கலாச்சார மையத்தைத் திறந்து வைக்கும் தலாய் லாமா, மதியம் ஆரோவில்லைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இடையில் பேசுகிறார் என்று ஆரோவில் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஆன் ரிக்கொயர் தெரிவித்தார்.
'மனித ஒருமைப்பாடும் சர்வதேசப் பொறுப்பும்' என்ற தலைப்பில் தலாய் லாமா உரையாற்றுகிறார் என்றார் அவர்.
ஆரோவில்லிற்குத் தலாய் லாமா மூன்றாவது முறையாக வருகிறார். கடந்த ஜனவரி 17, 1973இல் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்தார். பின்னர் டிசம்பர் 23, 1993இல் இரண்டாவது முறையாக வந்த தலாய் லாமா திபெத்தியக் கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.