ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 87 தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியாகின.
தேசிய மாநாட்டுக் கட்சி அதிகபட்சமாக 28 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இக்கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானால், காங்கிரஸ் அல்லது பிடிபி-யின் ஆதரவு தேவை. ஆனால் பிடிப-யுடன் தேசிய மாநாடு கூட்டணி வைத்துக் கொள்ளாது என்பதால், காங்கிரசின் ஆதரவை அக்கட்சி கோரியுள்ளது.
ஒமர் அப்துல்லா காந்தேர்பால் தொகுதியிலும், ஃபரூக் அப்துல்லா சோனாவர், ஹஸ்ரத்பால் தொகுதிகளிலும், முஃப்தி முகமது சயீது அனந்த் நாக் தொகுதியிலும், குலாம் நபி ஆசாத் பதேர்வாஹ் தொகுதியிலும், மெஹ்பூபா முஃப்தி வாச்சி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவு விவரம்:
மொத்த இடங்கள் - 87
தேசிய மாநாட்டுக்கட்சி - 28
மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) - 21
காங்கிரஸ் - 17
பாஜக - 11
சுயேச்சை, இதர கட்சிகள் - 10.