Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டின் மகிழ்ச்சியான மனிதர் லாலு!

நாட்டின் மகிழ்ச்சியான மனிதர் லாலு!
, புதன், 17 டிசம்பர் 2008 (19:35 IST)
நமதநா‌ட்டி‌ல் ‌மிகவு‌மமகிழ்ச்சியான அரசியல்வாதி மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாத‌எ‌ன்று பிரபல பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்காக பிரத்யேகமாக வெளியாகும் “கம்ப்ளீட் வெல்-பீயிங” என்ற பத்திரிகை, சினோவேட் என்ற ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனிதர் யார் என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.

இதில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து எப்படி உணர்கிறீர்கள் என அப்பத்திரிகை சார்பில் சச்சினிடம் கேட்கப்பட்ட போது, “இதனை மக்கள் எனக்கு அளித்த பாக்கியமாகக் கருதுகிறேன். இப்பட்டம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதனை எனது வாழ்வில் எப்போதும் மறக்க மாட்டேன் எனப் பெருமிதம் தெரிவித்தார்.

டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுவதற்கு முன்பாகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினுக்கு அடுத்தபடியாக நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் முறையே 2வது, 3வது இடங்களை பிடித்துள்ளனர்.

முதல் 10 இடங்களில் சல்மான்கான், சாருக்கான், சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், அனில் அம்பானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மகிழ்ச்சியான அரசியல்வாதி லாலு: இதேபோல் மகிழ்ச்சியான அரசியல்வாதி யார் என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைத் தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

webdunia
இது எப்படி உங்களுக்கு சாத்தியமானது எனக் கேட்டதற்கு, நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். மகிழ்ச்சி எனது பிறவிக்குணம் என பதிலளித்தார்.

இதேபோல் ஆரோக்கியமான அரசியல்வாதி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுள்ளார்.

தொழிலதிபர்கள் வரிசையில் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் 8 முக்கிய் நகரங்களில் உள்ள 25-45 வயதுடையவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அப்பத்திரிகையின் ஆசிரியர் கத்ரி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil