மக்களவை உறுப்பினர் செளத்ரி முனாவர் ஹசன் (வயது 45) ஹரியானா மாநிலத்தில் பல்வால் அருகில் நடந்த சாலை விபத்தில் இறந்தார்.
நேற்று நள்ளிரவு நடந்த விபத்தில் சிக்கிய முனாவர் ஹசன், இறந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் முசாஃபர்நகர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட ஹசன், கடந்த ஜூலை 22 இல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து சமாஜ்வாடி கட்சியில் இருந்து முனாவர் ஹசன் நீக்கப்பட்டதுடன், அவரைத் தகுதி நீக்கம் செய்யுமாறும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மக்களவைத் தலைவர் முன்பு நிலுவையில் உள்ளது.