ஜம்மு- காஷ்மீரில் நேற்று 4 ஆம் கட்டமாக 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 59.24 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை நடந்துள்ள மூன்று கட்டத் தேர்தல்களில் பதிவான வாக்குகளைவிட இந்த முறை குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 6 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 65 விழுக்காடு வாக்குகளும், மூன்றாம் கட்டமாக 5 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 68.22 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 4 கட்டங்களாக 39 தொகுதிகளுக்கு நடந்துள்ள தேர்தலில் சராசரியாக 64 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த மாநிலத்தில் மீதமுள்ள 48 தொகுதிகளுக்கு இன்னும் 3 கட்டங்களாத் தேர்தல் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.