டெல்லி மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ள மக்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ள முதல்வர் ஷீலா தீக்ஷித், டெல்லியை பாதுகாப்பாக சிறந்த வாழிடமாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.
டெல்லி மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிபெறும் நிலையில் உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது வெற்றியாகும்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் கூறுகையில், "மக்கள் எங்களின் மீது வைத்துள்ள நம்பிக்கை குறித்து நாங்கள் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இருந்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாங்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவோம். முடிக்கப்படாமல் உள்ள திட்டப் பணிகளை விரைவில் முடிப்போம். டெல்லியைப் பாதுகாப்பான சிறந்த வாழிடமாக மாற்ற முயற்சிப்போம்." எனறார்.