மும்பை: பாதுகாப்பு, உளவுப்பிரிவின் தோல்வியே மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தை இன்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ப.சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு, உளவுப்பிரிவு தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்கிறேன். நாட்டில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்புகள், நபர்கள்தான் மும்பை தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு போதுமான தடயங்கள் உள்ளது. இத்தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக மராட்டிய மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பைப் போன்றதொரு புதிய தேசிய அளவிலானதொரு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.