குற்ற விடயங்களில் பரஸ்பரம் சட்ட ரீதியாக உதவிக் கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை போஸ்னியா ஹெர்ஜெகோவினா அரசுடன் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடுகளுக்கு இடையிலான குற்றம், அவற்றுடன் பயங்கரவாதம் கொண்டுள்ள தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து முறியடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பாதுகாப்பு, பயங்கரவாதிகள் உள்ளிட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடத்திக் குற்றங்களை நிரூபித்தலின்போது உரிய முறையில் சட்டம் அமலாக்கம், குற்றங்களுக்கு உதவியுள்ள கருவிகள் மற்றும் தடயங்களைக் கண்டறிதல் ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த உடன்படிக்கை உதவும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த உயர் மட்டக்குழுக் கூட்டத்தின்போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்படும்.