இந்தியாவின் ஒற்றுமையை பயங்கரவாதிகள் உள்ளிட்ட யாராலும் உடைக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பெங்களூருவில் இன்று இந்திய அறிவியல் கல்வி நிறுவன வளாகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பேராசிரியர் எம்.சி. பூரிக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், "வளர்ந்து வரும் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்வதால்தான் தாக்குதல் நடத்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தை பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர்." என்றார்.
நமது மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசிற்கு எதிரான கோழை, பயங்கரவாதி, எதிரி என யாரும் நமது நாட்டின் ஒற்றுமை, சிறந்த வாழ்க்கை நோக்கிய நமது மக்களின் பயணம் ஆகியவற்றை உடைக்க நினைத்தால் எப்போதும் வெற்றிபெற முடியாது என்றார்.