பிரதமரின் ஊடக ஆலோசகராக மத்திய பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை பொது இயக்குனர் தீபக் சாந்து நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய தகவல் சேவை 1973ஆம் ஆண்டை சேர்ந்த அதிகாரியான இவர், மத்திய பத்திரிகை தகவல் அலுவலக தலைவராக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இருக்கிறார்.
இவர் அகில இந்திய வானொலி நிலையத்தின் கூடுதல் பொது இயக்குனராகவும் (செய்திகள்), தூர்தர்ஷன் செய்தி சேனலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
திரைப்பட விழா இயக்குனரகத்தின் இயக்குநராகவும், நிதித்துறை, வணிகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.