பயங்கரவாதத்தின் முன்பு நாம் மண்டியிட மாட்டோம், அதற்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்தார்.
ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலையில் உள்ள உரி நகரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சோனியா, அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்க்க நாம் விரும்புகிறோம். அதை நமது பலவீனமாகக் கருதிவிடக் கூடாது." என்றார்.
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. மனிதாபிமானத்திற்கும், மனித மதிப்பீடுகளுக்கும் எதிரான பயங்கரவாதத்துடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது. அதை நிச்சயம் முறியடிப்போம் என்றார் அவர்.
மேலும், பயங்கரவாதத்தின் முன்பு நாம் ஒருபோதும் மண்டியிட முடியாது. நிச்சயம் அதற்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார் சோனியா.