ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 கிலோ ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராஜூரி மாவட்டத்தில் நெளசரா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் மறைவிடத்தில் இருந்து இவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்.டி.எக்ஸ் 2 கிலோ, கையெறி குண்டுகள் 18, ஏ.கே. 56 துப்பாக்கிகள் 2, ஏ.கே. துப்பாக்கி குண்டுகள் 554 சுற்று, பிஸ்டல் 1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆயுதங்களில் அடக்கம் என்று அவர்கள் கூறினர்.