தங்களின் பாதுகாப்பு அமைப்பில் எங்கோ ஏற்பட்ட தோல்வியின் எதிரோலிதான் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் என்று கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறினார்.
தாக்குதல்கள் நடந்து ஒரு வாரம் முடியும் நிலையில் இன்று மும்பைக்குக் கடல் வழியாக வந்த அட்மிரல் சுரேஷ் மேத்தா, "மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாதிகள் கடல் வழியாகத்தான் வந்துள்ளார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்றார்.
"இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நாடே கொந்தளித்துள்ளதை என்னால் காண முடிகிறது. பாதுகாப்பு அமைப்பின் குறைபாடு என்ற அடிப்படையில்தான் இதைப் பார்க்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.