மத்திய அஸ்ஸாமில் உள்ள திபு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பிற்குக் கர்பி தீவிரவாதிகள்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
குவஹாட்டியில் இருந்து தின்சுகியா செல்லும் பயணிகள் ரயில் இன்று காலை திபு ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அதன் 8209 என்ற எண்ணுடைய பெட்டியில் 8.10 மணிக்கு நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கர்பி தீவிரவாதிகள்தான் இந்தக் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்று காவல்துறையினர் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.
இதற்கிடையில் புதிய அஸ்ஸாம் டி.ஜி.பி. யாக நேற்றிரவு பதவியேற்றுள்ள எம்.ஸ்ரீவஸ்தவா, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே தனது முதல் நோக்கம் என்று கூறியுள்ளார்.