உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஷிவ்ராஜ் பாட்டீல் விலகியதை அடுத்து, மத்திய நிதி அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை ஷிவ்ராஜ் பாட்டீல் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஷிவ்ராஜ் பாட்டீல் வகித்து வந்த உள்துறை அமைச்சகப் பொறுப்பு, நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிதம்பரத்திடம் உள்ள நிதித்துறையை, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.