நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 2ஆவது கட்டமாக அடுத்த மாதம் 10ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது.
டிசம்பர் 23ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறக்கூடும் எனறு தெரிகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதே நாளில் கூடும் என்றுப் நாடாளுமன்ற செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத்தின் 14ஆவது கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
அப்போது ஒத்தி வைக்கப்பட்ட இரு அவைகளும், மீண்டும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் முடிவடைந்து, அவற்றின் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகி விடும். எனவே வரும் 10ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர விலைவாசி உயர்வுப் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஆளும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.