Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: 8 பேர் பலி!

உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: 8 பேர் பலி!
, புதன், 19 நவம்பர் 2008 (12:59 IST)
உத்தரப்பிரதேசத்தின் பிஹ்தி பகுதியில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

அலஹாபாத்தில் நகரில் இருந்து மஹ்ஜான்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து புரமுஸ்தி காவல்சரகத்திற்கு உட்பட்ட பிஹ்தி அருகே எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil