நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - ஒன்று அனுப்பப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக சந்திரயான் - இரண்டு செயற்கைக்கோள் 2012ஆம் ஆண்டில் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இரண்டாவது சந்திரயான் செயற்கைக்கோளும் ஆளில்லாமலே செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கைக்கோள் மூலம் நிலவில் ரோபோட் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று கூறிய அவர், அந்த ரோபோட் நிலவில் இருந்து மாதிரி துகள்களை எடுத்து, ஆய்வு செய்து அதுபற்றிய தகவல்களை பூமிக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார்.
இதற்கிடையே சந்திரயான் - ஒன்று செயற்கைக்கோள் இன்றிரவு தனது முக்கிய தகவலை பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.