மாலேகான் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஜம்முவில் ஆடிட்டர் ஒருவர் உட்பட இரண்டு பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மாலேகான் குண்டு வெடிப்புகளின் பின்னணியைக் கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காவலர்கள், அதில் தொடர்புடையோரைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையாக ஜம்மு- காஷ்மீரில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு அருகில் உள்ள திரிகுடா நகர் என்ற இடத்தில் இருந்து வி.என். குமார் என்ற ஆடிட்டர், அவரது மகன் பவன் ஆகிய இரண்டு பேரைக் காவல் படை கைது செய்துள்ளதாக யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த் பாண்டே என்ற துறவி ஜம்முவில் நடத்தி வரும் மடத்தில் ஆடிட்டராகப் பணியாற்றுபவர்தான் வி.என். குமார் என்பது குறிப்பிடத்தக்கது.