அமெரிக்காவின் 44ஆவது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஒபாமாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பா.ஜ.க., அவர் இந்தியாவுடன் நல்லுறவைத் தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க.வின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், "அமெரிக்காவின் 44ஆவது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஒபாமாவிற்கு நாங்கள் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவுடன் நல்லுறவைத் தொடருவான் என்று அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே சமத்துவமான உறவுகளை புதிய அமெரிக்க அதிபர் தொடர்ந்து பராமரிப்பார் என்று பா.ஜ.க. நம்புகிறது, அதற்கு ஒத்துழைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.