பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பொறுமை வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலம் லட்டூரில் நடந்த கூட்டுறவு வங்கித் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ள குண்டு வெடிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
மேலும், "இந்தியா கடந்த 61 ஆண்டுகளாகப் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. தற்போது நாம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தச் சூழ்நிலையில், நமது நாட்டின் இளைஞர்கள் நிதானமான இருக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்" என்றார் அவர்.