நிலவை ஆய்வு செய்ய நேற்று புவி சுழற்சிப் பாதையில் ஏவப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தின் சுழற்சிப்பாதை இன்று முதல் முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் (பி.எஸ்.எல்.வி.- சி 11) மூலம் நேற்று காலை புவி சுழற்சிப் பாதையில் செலுத்தப்பட்டபோது புவியிலிருந்து 255 கி.மீ. நெருங்கிய தூரத்திலும் (அபோஜி), 22,800 கி.மீ. தொலைத்தூரமும் (பெரிஜி) கொண்ட சுழற்சிப் பாதையில் சந்திரயான் சுற்றிவந்துக்கொண்டிருந்தது.
இது இன்று காலை, அதிலுள்ள நியூட்டன் திரவ உந்து இயந்திரத்தை இயக்கி அதன் தொலைத்தூர சுழற்சிப் பாதையை 37,900 கி.மீ. தூரத்திற்கும், நெருங்கிய தூரத்தை 305 கி.மீ. அளவிற்கும் அதிகப்படுத்தப்பட்டது. இந்த இயக்கம் பெங்களுருவிற்கு அருகிலுள்ள இஸ்ரோவின் இஸ்ட்ராக் என்று கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
விரிவாக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் சுற்றிவரும் சந்திரயான் விண்கலம், 11 மணி நேரத்திற்கு ஒரு முறை புவியைச் சுற்றிவரும் என்று இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.