அகமதாபாத், டெல்லி மற்றும் பிற இடங்களில் அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய முந்திய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்து மேலும் தகவல் தெரிவிக்க குற்றவியல் பிரிவு உயரதிகாரிகள் மறுத்துவிட்டனர்.