மராட்டிய நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரேவிற்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.
பிகார் மக்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டது தொடர்பான வழக்கில் ராஜ் தாக்கரேவிற்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகரக் காவல் துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ராஜ் தாக்கரே விரைவில் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, இதே மாதிரியான வழக்குகள் மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி ராஜ் தாக்கரே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.