ஒரிஸ்ஸாவில் பலத்த மழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீடித்து அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு மற்றும் தணிக்கையாளரின் அறிக்கையை தாக்கல் செய்ய வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 44AB கீழ் கொடுக்கப்பட்ட கடைசிநாளான செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பதிலாக அடுத்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.