மேற்கு மராட்டியத்தில் உள்ள சடாரா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கில் 73.9 டிகிரி தீர்க்க ரேகையும் வடக்கில் 17.9 டிகிரி அட்ச ரேகையும் சந்திக்கும் புள்ளியில் கொய்னா அணையில் இருந்து 13.6 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொய்னா அணை நிறைந்துள்ளபோதிலும், நில நடுக்கத்தினால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நில நடுக்கத்தினால் வேறு எந்த உயிர் சேதமோ பொருட்சேதமோ இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.