Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைகிறது!

காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைகிறது!
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (20:31 IST)
வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து இன்று கரையைக் கடக்க‌க்கூடு‌மஎன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒ‌ரிசகரையோர‌பபகு‌தி ‌ ச‌ண்டபா‌லி‌‌யி‌லஇரு‌ந்து 130 ‌கிலோ ‌மீ‌ட்‌ட‌ரதொலை‌வி‌லஅட்ச ரேசை 20.5 டிகிரி வடக்கும், தீர்க்க ரேகை 87.5 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது.

இதமேலும் வலுவடைந்து வடமே‌ற்கு‌த் ‌திசை‌யி‌ல் நக‌ர்‌ந்து, சண்டபாலி அருகே இன்று மாலை கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகாவின் வடக்கு பகுதிகளிலும், தெலுங்கானா, ஆந்திராவின் கரையோரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கு கரையோரப் பகுதிகளிலும், தெலுங்கானா, மற்றும் கர்நாடகாவின் கரையோரப் பகுதிகளிலும் பரவலாக பல‌த்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூ‌றியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil