காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று காலை 10.32 மணி அளவில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் உணரப்பட்டுள்ள இந்த நில நடுக்கத்தால் பீதியடைந்த பொது மக்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
5.5 ரிக்டர் அளவிலான இந்த நில நடுக்கத்தினால் ஏதேனும் உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை.