Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விவசா‌யிகளு‌க்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கடித‌ம்!

‌விவசா‌யிகளு‌க்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கடித‌ம்!
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (20:02 IST)
விவசாய‌ககட‌ன்களை‌தத‌ள்ளுபடி செ‌ய்ததை‌சசு‌ட்டி‌க்கா‌ட்டி, வரு‌கிம‌க்களவை‌ததே‌ர்த‌லி‌லகா‌ங்‌கிரசு‌க்கவா‌க்க‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி ஒ‌வ்வொரு ‌விவசா‌யி‌க்கு‌ம் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகடித‌மஎழு‌‌தியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த‌ககடித‌ம் ‌விரை‌வி‌ல் ‌விவசா‌யிகளை‌சசெ‌ன்றடையு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌தி‌க் ‌விஜ‌ய்‌சி‌ஙகூ‌றினா‌ர்.

நாடு முழுவதும் விவசாயிகளின் கடன் தொகை ரூ. 70 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இ‌ந்த விவசாயிகளின் பட்டியல் சில நாள்களில் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றார் திக் விஜய்சிங்.

கட‌ன் த‌ள்ளுபடி சலுகையை தேர்தல் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்த காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. கடன் தள்ளுபடி செய்த காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு மன்மோகன் எழுதியு‌ள்ள கடிதத்துடன் ஒவ்வொரு விவசாயியையும் நே‌‌ரி‌ல் சந்திக்க அ‌க்க‌ட்‌சி‌யின‌ர் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்ட பிரசாரம் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தொடங்குகிறது. கிராமப் புறங்களில் ஒரு குடும்பத்தில் குறைந்தது மூன்று பேரை காங்கிரஸ் உறுப்பினர்களாக்கவோ அல்லது காங்கிரஸ் ஆதரவாளர்களாக்கவோ திட்டமிட‌ப்ப‌ட்டுள்ளது.

கிராமப் பஞ்சாயத்து அளவில் இய‌ங்கு‌ம் கட்சிக் குழுக்களை, பிற்படுத்தப்பட்ட, தலித் பிரதிநிதிகள் அ‌திக‌ம் இடம் பெறும் வகையில் மாற்றியமைக்கவு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யின‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர்.

இதுதவிர கிராமப்புற வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் சட்டம், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil