Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா-ஆஃப்கான். இணைந்து போராடும்!

Advertiesment
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா-ஆஃப்கான். இணைந்து போராடும்!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (17:09 IST)
ஆப்கானிஸ்தானில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை பய‌ங்கரவாதத்தின் கரங்களில் இருந்து பாதுகாக்க இந்தியாவும், ஆஃப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என இருநாட்டு தலைவர்களும் அறிவித்துள்ளனர்.

சார்க் மாநாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாகப் பேட்டியளித்த போது, 21ஆம் நூற்றாண்டைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கு இடையே புதிய நட்புறவை வளர்க்கும் அதே சமயத்தில், கடந்த கால உறவுகளையும் புதுப்பி‌ப்போம் எனக் கூறினர்.

காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலானது, இந்தியா-ஆஃப்கான் இடையிலான நட்புறவின் மீதான் தாக்குதல் எனக் குறிப்பிட்ட மன்மோகன், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ஆஃப்கானிஸ்தா‌னி‌ல் உ‌ள்ள அய‌ல் நா‌ட்டவரை‌ப் பயங்கரவாதத்‌தி‌ன் ‌பிடி‌யி‌லிரு‌ந்து பாதுகாப்பது தங்களின் தார்மீக உரிமை எ‌ன்ற ஹமீத் கர்சாய், உலக நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், ஆஃப்கானிஸ்தானும் ஒருங்கிணைந்து போ‌ரிடு‌ம் அதேநேர‌த்‌தில், ஆஃப்கானிஸ்தானில் அமைதியான ஜனநாயகம் மலரத் தேவையான எ‌ல்லா உதவிகளையும் இந்தியா செய்து கொடுக்கும் என ஹமீத் கர்சாயிடம் பிரதமர் மன்மோகன்சிங் உறுதி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil