ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டுள்ளது பற்றிக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.மு.கூ. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய சோனியா, "இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் ஐ.மு.கூ. உருவாகியிருக்க முடியாது. சிறந்த ஒப்பந்தத்தையும் நாம் பெற்றிருக்க முடியாது" என்றார்.
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவிற்காக இடதுசாரிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், "அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சிகளின் போது இடதுசாரிகள் நம்முடன் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டுள்ளது பற்றிக் கவலை தெரிவிக்கும் அதே நேரத்தில், அடுத்து நடக்க வேண்டியது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் சோனியா.
இதற்கிடையில் உரிய நேரத்தில் ஆதரவளிக்க முன்வந்த சமாஜ்வாடி கட்சிக்கும் சோனியா நன்றி கூறியுள்ளார்.