நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 44வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
புது டெல்லியில் சாந்தி வனத்தில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் அஜய் மாகென், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத் தலைவர் பூட்டா சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஜெ.பி.அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
அனைத்து மதத்தினரும் பங்கேற்ற பிரார்த்தனையும் நடந்தது. இதன் முடிவில், ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரைகள் அவரின் நினைவாக ஒலிபரப்பப்பட்டது.
ஜவஹர்லால் நேரு கடந்த 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி அதிகாலை காலமானார்.