கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம் என்று பாஜக கூறியுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 224 இடங்களில் 220 இடங்களுக்கான முன்னணி நிலவரங்கள் தெரிய வந்துள்ள நிலையில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் சதானந்த கெளடா, தங்களது கட்சிக்கு அருதிப் பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார்.
எந்த காரணத்தைக் குறித்தும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை நாட மாட்டோம் என்று கூறிய சதானந்த கெளடா, அதை விட எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம் என்று கூறினார்.
ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவிற்கு வந்தால் அவர்களை நிச்சயம் வரவேற்போம் என்றும் சதானந்த கெளடா கூறியுள்ளார்.
எங்களுடைய கட்சி 113 முதல் 117 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.