கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிணியில் உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
3 மணி நேர வாக்கு எண்ணிக்கையில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் கிடைத்துள்ளது.
அதன்படி பாஜக 108 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை பாஜகவிற்கு இணையாக வந்த காங்கிரஸ் கட்சி தற்பொழுது 70 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
தேவேகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதரக் கட்சிகள் 7 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 38 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும், சுயேட்சை ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.