பயங்கரவாத நடவடிக்கைகள் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து பரவிவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த கூட்டுப் புலனாய்வுக் கழகத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.
இதுகுறித்துப் புனேவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளின் தொடர்புகளை முறியடிக்க கூட்டுப் புலனாய்வுக் கழகம் அவசியம்" என்றார்.
மாநில அரசுகள் தங்களின் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் விடுவதன் மூலம் தேவையற்ற பதற்றம் உருவாவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க ஒரு அமைப்பை உருவாக்குவது அவசியம் என்றார்.
காவல்துறையில் இருந்து அல்லாமல் ஒரு தனிப்பட்ட புலனாய்வு அமைப்பை மாநில அரசுகள் கட்டாயமாக உருவாக்க வேண்டும் என்றார் அமைச்சர் ஜெய்ஸ்வால்.