பெங்களூரு : கர்நாடக சட்டமன்றத்திற்கான 2ஆம் கட்ட தேர்தல்கள் நாளை நடைபெறுகிறது. மொத்தம் 66 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நாளை காலை துவங்குகிறது.
66 தொகுதிகளிலும் உள்ள 12,271 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவுகள் எந்தவித இடையூறுமில்லாமல் நடைபெற ஏற்பாடுகள் செய்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 மாவட்டங்களில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவிற்காக 56,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மே 10 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியது. மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான இந்த தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு மே 22 ஆம் தேதி நடைபெறுகிறது.