புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கவலைக்கிடமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவர் கவலைக்கிடமாக நிலையில் இன்று டெல்லியில் உள்ள நொய்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
91 வயதான சுர்ஜித், சுதந்திர போராட்ட தியாகி ஆவார். உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இருந்தாலும் சக தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று பொலிட் பீரோவில் மட்டும் அங்கம் வசித்து வந்தார்.