பர்வானி (ம.பி.): மத்தியப் பிரதேச மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் உள்ள சேந்த்வா என்ற ஊரில் தொழிற்சாலை அருகே எரிமலை ஒன்று வெடித்தது, மேலும் ஒன்றரை மணி நேரத்திற்கு அது உயிர்ப்புடன் இருந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு எற்பட்டதாக தெரிகிறது.
சத்யம் ஸ்பின்னிங் (நூல்) தொழிற்சாலை அருகேயுள்ள வெற்று நிலத்தில் நெருப்புக் குழம்புடன் சாம்பல்புகை கிளம்பியது. இது சுமார் 5 முதல் 6 அடி வரை எழுந்தததாக சேந்த்வா அரசு அதிகாரி விஷ்ணு கமால்கர் தெரிவித்துள்ளார்.
8 செ.மீ சுற்றளவுள்ள நிலக்குழியிலிருந்து லாவா வெளிவந்ததாக அவர் தெரிவித்தார்.
புவியியல் மாற்றங்களால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உண்மையான காரணங்களை கண்டறிய நிபுணர் குழு அந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது.