ஜம்மு- காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் இருவர் இன்று பாதுகாப்புப் படையினர் முன்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தனர்.
ஜம்மு மாவட்டத்தில் உள்ள பலேசா காவல் நிலைய எல்லையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.
அவர்கள் ஒப்படைத்த ஆயுதங்களில் ஏ.கே.47 துப்பாக்கிகள்2 , வெடிமருந்து உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் அடங்கும்.